திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மன்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிராம தேவதை, அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரம் பகுதிகளில், அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அம்மனுக்கு புதிய ஆலயம்
இந்தநிலையில், அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மன் ஆலயம் சிதிலமடைந்த நிலையில் ஊர் பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு ஆலயம் புனரமைக்கபட்டு புதியதாக ஆலயம், விமானமண்டபம், மஹாமண்டபம் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம் ஆகியவைகள் புதியதாக கட்டி முடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிமையன்று விநாயகர் பூஜையும், மாலை முதல்கால யாக ஹோமத்துடன் மஹா கும்பபாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது .
விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி
ஞாயி்றுக்கிழமை காலை 9 மணியளவில் இரண்டாம் காலசாலை ஹோமம் பூஜை அடுத்ததாக மூலவர் பூஞ்சோலை போத்தியம்மன் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி நடைப்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை முதல் மூன்றாம் கால ஹோமம் யாக பூஜையுடன் பூர்ணாஹீதி நடைப்பெற்று.
ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழுங்க
பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு கோயிலை சுற்றி வந்து ஆலய விமான மண்டப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களின் ஓம்சக்தி பராசக்தி கோஷம் முழுங்க மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து பரிவாரா மூர்திகளான ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீ பூஞ்சோலை போத்தியம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மஹா கும்பாபிஷேகம்
பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.