கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மோட்டர்சைக்கிளின் விலை உயர்வு, அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் வந்த கரிஸ்மா பைக்:


ஹீரோ நிறுவனத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற மோட்டார்சைக்கிள்களில் ஒன்று கரிஸ்மா மாடல். கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக் மாடல், அடுத்தடுத்து பல்வேறு மேம்படுத்துதல்களுடன் கடந்த 2019ம் ஆண்டு வரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் ஸ்போர்ட்டி லுக் இளைஞர்களை சுண்டி இழுத்ததால், இந்திய சந்தையில் விற்பனையிலும் அசத்தியது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் கரிஸ்மா மோட்டர்சைக்கிள் மாடல் விற்பனை, கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான், 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பல்வேறு அப்டேட்களுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி இந்திய சந்தையில் புதிய கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. 


விலையை உயர்த்துவதாக ஹீரோ நிறுவனம் அறிவிப்பு:


கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் விலை 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த விலையில் 7 ஆயிரம் ரூபாயை உயர்த்துவதாகவும், அதன்படி புதிய விலையாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. விலை உயர்வுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


முன்பதிவு தீவிரம்:


ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் எக்ஸ்எம்ஆர் 210 பைக் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதே விலையிலான முன்பதிவு செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும், டீலர்ஷிப் கடைகளுக்கு நேரடியாக சென்றும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 7046210210 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம். இதற்கான டோக்கன் தொகையாக ரூ.3000 வசூலிக்கப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 புதிய 210சிசி, சிங்கிள் சிலிண்டர் நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் லிக்விட்-கூல்டு ஆகும்.  இது 25.15 Bhp மற்றும் 20.4 Nm daark ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் & சிறப்பம்சங்கள்:


எல்சிடி அமைப்பில் முழு டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனிங் வழங்கப்பட்டுள்ளது. இதில், எரிபொருள் நிலை, இன்ஜின் வெப்பநிலை, சராசரி வேகம், எரிபொருள் திறன் வாசிப்பு, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன்,  வேகமானி மற்றும் டேகோமீட்டர் அளவீடுகள் உட்பட பல தகவல்கள் வழங்கப்படும். புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான முகப்பு விளக்குகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய சேசிஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக், பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.  எக்ஸ்எம்ஆர் 210 பைக் மாடல் ஐகானிக் நிறமான மஞ்சள் மட்டுமின்றி, டர்போ ரெட் மற்றும் மேட் பாண்டம் பிளாக் ஆகிய நிறங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI