ஓட்டங்காடு மாரியம்மன் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஓட்டங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேவஸ்தானத்தின் மாரியம்மன் திருக்கோயில். மாராசுரனை அழித்து மக்களை காத்தருளிய அம்பிகை இத்தளத்தில் கத்தி, கபாலம், உடுக்கை, சூலம், ஜவாலாகேசத்துடன் அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் அம்பிகையை மனம் உருக பிரார்த்திப்பவர்களின் குறைகளை அகற்றி சகல நன்மைகளையும் அருள்வார் எனக் கூறப்படுகிறது.  


CBSE Board Results: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?- சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு




கோயில் கும்பாபிஷேக பணிகள் 


மேலும் இந்த அம்பிகை சுற்று வட்டாரத்தில் உள்ள 8 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறார். இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க இக்கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, திருப்பணிகளுக்கான பூர்வமாக பணிகள் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிய காட்டிட வேலைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று நிறைவுற்றது. அதனை தொடர்ந்து கோயில் மகா கும்பாபிஷேகம் விழா  இன்று வெகு விமரிசையாக  நடைபெற்றது.


Fact Check: கோவிஷீல்ட் தொடர்பாக பரவும் செய்தி.. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா?


யாகசாலை பூஜை 


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 29 -ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், கடந்த 30-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின.  தொடர்ந்து இன்று ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது.  முதலில் அருகில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிவாசாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயில் சுற்றி வலம் வந்து மகா மாரியம்மன் கோயில் விமான கலசத்தை அடைத்தனர்.


PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!




அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Bajaj Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனத்தின் மிகப்பெரிய பல்சர் மாடலான NS400Z அறிமுகம் - புதுசா என்னென்ன இருக்கு?