மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கீழ நாஞ்சில் நாடு பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழாவை நடத்த அப்பகுதி மக்கள் முடிவு எடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் பங்களிப்புடன் கோயில் வண்ணம் தீட்டுதல் சிலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கோயிலின் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.




கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது. இதனை அடுத்து கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மஹாபூர்ணாஹூதி செய்யப்பட்டு மற்றும்  மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, விமான கோபுர கலசங்களை அடைந்தது. 


IND vs AUS 3rd Test: மூன்றே நாட்களில் இந்தியாவை சோதித்த சோகம்.. பழி வாங்கும் படலத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா..!




அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வாங்கி சென்றனர்.


PM Modi Flash Light On : "எல்லாரும் மொபைல் டார்ச் லைட்டை ஆன் பண்ணுங்க” : சொன்ன பிரதமர் மோடி.. காரணம் என்ன?




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண