வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா


கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.




தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி நாள்தோறும் சிறப்பு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.


இந்நிலையில் இன்று கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் ஆலய மண்டபத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டார்.



அதை தொடர்ந்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.


கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா உற்சவர் திருவீதி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.