மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனை பெறுவதற்காக குழந்தை வரம் வேண்டி மிருகண்ட மகரிஷி யாகம் செய்த ஆலயமாகவும், பார்வதியின் சாபத்தால் ஒளியை இழந்த அக்ணி பகவான் இறைவனின் வரத்தால் இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் நீராடி இழந்த ஒளியை பெற்றதாக கோயில் வரலாறு கூறுகிறது.




இவ்வாலயத்தை 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழன் கருங்கல் ஆலயமாக புதுப்பித்தார். இது குறித்த கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை சுவர்களில் காணப்படுகிறது. பரணி நட்சத்திரக்காரர்களின் பரிகார ஆலயமாக விளங்கும் சிறப்பு  மிக்க இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு  நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்கள்  கடந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. 


Vairamuthu Birthday: வைரமுத்து பிறந்தநாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. சொன்னது என்ன தெரியுமா?




அதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக குண்டம்  அமைக்கப்பட்டு, நவகிரக சாந்தி ஹோமம், மகாமிர்த்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டு  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது‌. இதில்  சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Trekkers Rescue: ஹிமாச்சல பிரதேசத்தில் சிக்கித் தவித்த 28 ட்ரெக்கிங் வீரர்கள்.. பத்திரமாக மீட்பு .. இணையத்தில் வைரலாகும் வீடியோ..


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண