மயிலாடுதுறையில் மயில்உருவில் சிவனை பூஜித்த ஆலயமான  மாயூரநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் யாகசாலை பூஜையில் ஓதுவா மூர்த்திகளின் 82 மணி நேர அகண்ட பாராயண நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 7 திருமுறைகளில் வந்த பதிகங்கள் திரும்ப வராமல் தொடர்ந்து பண்ணிசை மாறாமல் இசைக்கபட்டு வருவது ஆன்மிக அன்பர்களை அகமகிழ்வில் ஆழ்த்தியுள்ளது.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறும் இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்றதலம். இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழா தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது.


One Nation One Election: எதிர்க்கட்சிகள் ஷாக்..! ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து ஆராய சிறப்பு குழு - மத்திய அரசு அறிவிப்பு




கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து  நேற்றிரவு 3 -ம் கால் யாகசாலை பூஜைகள் பூரணாகுதி ஷோடச சுவாதினி தீபபூஜை நடைபெற்றது. இதில் ஓதுவா மூர்த்திகளின் 82 மணிநேர அகண்ட பாராயணம் ஓத துவங்கி வருகின்ற  3 -ம் தேதி கும்பாபிஷேகம் முடியும் வரை தொடர்ந்து நடைபெறுகிறது.


Commercial Cylinder Price: மீண்டும் குறைந்த சிலிண்டரின் விலை.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் மத்திய அரசு..!




12 திருமுறைகளில் குறிப்பாக 7 திருமுறைகளுக்கு உள்ளாக திருஞானசம்பந்தரின் முதல் 3 திருமுறைகள், திருநாவுக்கரசரின் 4, 5, 6 திருமுறைகள், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய 7-ம் திருமுறை ஆகிய 7 திருமுறைகள் பண்ணிசை மாறாமல் இசைக்கப்பட்டு வருகிறது.  திருமுறைகளில் வந்த பதிகங்கள் திரும்ப வராமல் தொடர்ந்து பதிகங்கள் பண்ணிசை மாறாமல் இசைக்கப்பட்டு வருகிறது. இதனை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக அன்பர்கள் கேட்டு ரசித்து வருகின்றனர்.