மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை புராண வரலாற்று நிகழ்வாக அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு, சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.


திருப்போரூர் : ஓம் முருகா ஓம் முருகா.. கோஷமிட்ட பக்தர்கள் துவங்கியது கந்தசஷ்டி பெருவிழா..!




இந்தாண்டு துலா உற்சவத்நை முன்னிட்டு கடந்த ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயத்தில் இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து மீண்டும் அவருடன் இணைந்ததாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் மயிலாடுதுறை என்று ஊர் பெயர் பெற்றது. 


Kandha Sashti Vizha:திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்.. சூரசம்ஹாரம் எப்போது..? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?




அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிவாலயங்களில் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது. மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக மயிலம்மன் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பூதம் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மயிலம்மன் புறப்பட்டு தீர்த்தவாரி  நடைபெற்றது. தொடர்ந்து  மாயூரநாதர் ஆலய சன்னதியில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை செய்யப்பட்டு  சுவாமி மாயூரதாண்டவம் ஆடிய நிகழ்வு புராணவரலாறு படி நடைபெற்றது. பின்னர் நடராஜர் சன்னதியில் மயில் உருவில் கொளரி தாண்டவகாட்சியோடு மகாதீபாரதனை நடைபெற்றது. அபயாம்பிகை அம்மன்  சாபவிமோசனம் நீங்கி அம்பிகை உருவம் கொண்டு சோடச தீபாரதனை நடைபெற்றது.


Monsoon : துவங்கியது பருவமழை.. 100% நிரம்பிய 66 ஏரிகள்.. காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் பட்டியல் இதோ.




இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வருகின்ற  இன்று மதியம் அம்மாவாசை தீர்த்தவாரியும், இரவு திருக்கல்யாணமும்  15-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற்று 16-ம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது. மேலும் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வருகிறது 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


களைகட்டிய காஞ்சிபுரம் வரதர் கோவில்.. வெடி வெடித்துக் கொண்டாடிய பக்தர்கள்..