வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வழியெங்கும் பக்தர்கள் பட்டாசு வெடித்து வரதராஜ பெருமாளை வரவேற்றனர்.

 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி பண்டிகை ஒட்டி சிறப்பு உற்சவத்தில் வரதராஜ பெருமாள் மூதேவி ஸ்ரீதேவியுடன் பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணியப்பட்டு அலங்காரம் மண்டபத்தில் ஏழு தலை பக்தர்களுக்கு காட்சியளித்தார். 




பெண் கோவிலின் உள்ள மாடவீதிகளில் திருவீதி உலா நடைபெற்று வழியெங்கும் பக்தர்கள் சரவெடி வெடித்தும், பெண்கள் புஷ்பானம், கலர் மத்தாப்பு கொளுத்தி வழியெங்கும் சுவாமி வரதப் பெருமாளை பட்டாசு வெடித்து வரவேற்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு  பட்டாசு வெடித்து சாமியை வரவேற்றனர்.

 










காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 

 

அத்தி வரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது . ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

 




வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவிவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.




இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது.