கந்த புராணம்: 



கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் சூரபத்மன், சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் வான தேவதைகளுக்கு பெரும் தொல்லைகளை ஏற்படுத்தினார்கள். அவர்களை அழிக்க சண்முக பகவான் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து அவதாரம் எடுத்தார். முருகப்பெருமான்  பார்வதி தேவியிடம் இருந்து வேல் ஆயுதத்தை  (ஈட்டி ஆயுதம்) ஏற்றுக்கொண்டு, வீரபாகு தேவர் மற்றும் பிற தேவர்களுடன் சூரபத்மன் மற்றும் அவனது அரக்கர் படையுடன் போரிட திருச்செந்தூருக்கு சென்றார்.




போரின்போது முருகப்பெருமான் சிங்கமுகசுரத்தை சக்தி தேவியின் வாகனமாக மாற்றினார். சூரபத்மன் சண்டையிட்டுக் கொண்டு கடல் அடியில் மாமரமாக ஒளிந்து கொண்டு தப்பிக்க முயன்றான். முருகப்பெருமான் மாமரத்தைப் பிளந்து ஒரு பாதியை மயில் வாகனமாகவும், மற்றொரு பாதியை  சேவல் கொடியாகவும் மாற்றினார். அசுரர்களை அழித்ததற்கும், தேவர்களை விடுவித்ததற்கும் பலனாக ஆண்டுதோறும் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள். 




திருப்போரூர் கந்தசாமி  கோவில்


 

திருப்போரூர் கந்தசாமி  கோவில் கந்த சஷ்டி லட்சாசனை பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி  திருக்கோவிலில் ஆண்டுதோறும்  ஐப்பசி மாதம் கந்த சஷ்டி லட்சாசனை பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று திருப்போரூர் கந்தசாமி கோவிலில்  கந்த சஷ்டி லட்சாசனை பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.



 

திருப்போரூர் முருகன்கோயில் வட்டமண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றபட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு முருகப்பெருமானுக்கு தீபாராதனை செய்தனர். இதில் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



 

7 நாள் நடைபெறும் கந்த சஷ்டி லட்சாசனை திருவிழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிளி வாகனம்,  ஆட்டுக்கடா  வாகனம், புருஷன் மிருக வாகனம், பூத வாகனம், வள்ளி அன்ன வாகனம் மற்றும் யானை வாகனங்களில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்வு வருகிற 18 ஆம் தேதி மாலை  நடைபெறும். மறுநாள் 19ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்ற உள்ளது. சூரசம்கார நிகழ்வின் போது  பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.




கந்த சஷ்டி எப்போது ? எந்தெந்த தினத்தில் என்னென்ன விசேஷம் ?



ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் கந்த சஷ்டி தொடங்குகிறது.


நவம்பர் 13 ( திங்கட்கிழமை) – கந்த சஷ்டி விழா தொடக்கம்
நவம்பர் 14 ( செவ்வாய்)          - முருகப்பெருமான் வேல் வாங்குதல்
நவம்பர்  15 ( புதன்)                  - சூரபத்மனுக்கு தூது விடுதல்
நவம்பர் 16 (வியாழன் )           - சூர்பத்மனுடான போர் தொடங்குதல்
நவம்பர்  18 ( சனி)                     -  சூரசம்ஹாரம்
நவம்பர் 19 ( ஞாயிறு)               - திருக்கல்யாணம்


லட்சார்ச்சனை என்றால் என்ன ? 
நூறாயிரம் அர்ச்சனை என்பதே லட்சார்ச்சனை என்றும், சத சஹஸ்ர அர்ச்சனை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, கோயில்களில் வருஷத்துக்கு ஓரிருமுறை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.