மாயூரநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய துலா உற்சவ பெருவிழா - பக்தி பரவசத்தில் பக்தர்கள்

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. 

Continues below advertisement

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ரிஷப கோடி ஏற்றப்பட்டு பத்து நாள் உற்சவம் தொடங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

துலா உற்சவம் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மையப்பகுதியில் ஓடும் காவிரி துலாக்கட்டத்தினை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதால் ஐப்பசி மாதம் 30 நாளும் மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதே போல் வதான்யேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறும். 


முதல் தீர்த்தவாரி 

அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17 -ஆம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துலா உற்சவத்தின் பத்து நாள் உற்சவம் விழா சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

Sai Pallavi - Sivakarthikeyan : தெலுங்கு ரசிகர்களையும் பிடிச்சிட்டாங்க...தெலுங்கில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன், சாய்பல்லவி


ரிஷப கொடியேற்றம் 

அதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் கொடியேற்றம் நடைபெற்றது. மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடியானது வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து துலா உற்சவ கொடி மரத்திற்கும், விநாயகர் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

Thug Life : மக்களே சம்பவம் லோடிங்... இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் தக் லைஃப் அப்டேட்


துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் 

இந்நிகழ்வில் மயிலாடுதுறை சுற்றுவாட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆலயத்தில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா மற்றும் தீர்த்தவாரிமும், வருகின்ற 10 -ஆம் தேதி மயிலம்மன் பூஜை, 12-ஆம் தேதி திருக்கல்யாணம், 14-ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 15 -ஆம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவமும், 16 -ம் தேதி முடவன் முழுக்கு உற்சவமும் நடைபெறவுள்ளது. 

USA Election: ஹிலாரி கிளிண்டனுக்கு எமனாக இருந்த ஸ்விங் மாநிலங்கள்: அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் அந்த 7 மாநிலங்கள்.!


வதான்யேஸ்வரர் கோயில் 

இதேபோல் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் துலா உற்சவத்தை முன்னிட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது. கொடிமரத்தின் முன்பு விநாயகர், சண்டிகேஷ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. இவ்வாலயத்திலும் திருக்கல்யாணம், திருத்தேர், பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற உள்ளது. துலா உற்சவத்தின் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வருகின்ற 15 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement