அமரன்


அமரன் திரைப்படம் தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ப்ளாக்ஸ்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயனும் இந்துவாக சாய் பல்லவியும் ரசிகர்களுக்கு பிடித்த ஆன்ஸ்கிரீன் ஜோடிகளாக மாறியுள்ளார்கள். அமரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்குவில் இப்படம் பெரியளவில் வெற்றிபெற்றதற்கு நேற்று ஹைதராபாதில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவி கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடினார்கள். மேலும் இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் தெலுங்கில் எழுதி வைத்து பேசியது அனைவரையும் கவர்ந்தது.


சிவகார்த்திகேயன் சாய் பல்லவி கூட்டணி


முன்னதாக சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். "சாய் பல்லவிக்கு தமிழில் அமைந்த முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமரன் அமைந்திருக்கிறது. அது என்னுடைய படமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி" என எஸ்.கே கூறினார். இதேபோல் இந்து ஹைதராபாதில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனிடம் இப்படி கூறினார் " எப்படி தமிழில் எனக்கு முதல் ப்ளாக்பஸ்டர் உங்ககூடயோ அதேபோல் உங்களுக்கு தெலுங்கில் முதல் ப்ளாக்பஸ்டர் என் படத்துல அமைந்திருக்கு. அதில் எனக்கு ரொம்ப பெருமை. இனி வரும் உங்கள் படங்களும் நிச்சயமாக கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது' . 


தெலுங்கு மார்கெட்டை பிடித்த சிவகார்த்திகேயன்


தமிழில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தாலும் தெலுங்கி அவரைக் காட்டிலும் சாய் பல்லவிக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.. சாய் பல்லவியுடன் சிவகார்த்திகேயனின் கெமிஸ்ட்ரியை தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு இனிமேல் தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய மார்கெட் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். விஜய் , சூர்யா , தனுஷ் போல் சிவகார்த்திகேயனுக்கு இனி தெலுங்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருக்கும் என்பது நிச்சயம்.