Soorasamharam 2024: களைகட்டும் சூரசம்ஹார நிகழ்வு; பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்

பழனியில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை  முன்னிட்டு சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணியில்  கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு. இத்திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர்  2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான  சூரசம்காரம் நிகழ்ச்சி நாளை மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட சூரன்களின் உருவங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement


அதன்படி, சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் ஊர் கோவிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்போது  தயார் செய்யப்பட்ட சூரர்களின் உருவங்கள் நாளை சூரசம்ஹாரத்தின் போது முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக முக பெருமானுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளது இதில் பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் கோவிலில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமாள் அன்னை அறம் வளர்த்த நாயிடம் இருந்து வேல் வாங்கும் வைபோகம் மிகவும் நேர்ச்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவில் உள்ளது.


இக்கோவிலில் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரர் அறம் வளர்த்த நாயகி மற்றும் முருகப்பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று(நேற்று) ஐந்தாம்  நாளான கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று நடைபெற உள்ள சூரனை சம்ஹாரம் செய்ய  அன்னை அறம் வளர்த்த நாயகி வேல் வாங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் முருகப்பெருமாள் அன்னையிடமிருந்து வேலை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் வைபோக விழாவில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement