மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்புக்குரிய, காளிதேவி வழிபட்ட பழமை வாய்ந்த தலமான ஓம்காளீஸ்வரர் கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது .


சேலம் ஸ்ரீ வேடியப்பன், அம்சாரம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா- திரளான பக்தர்கள் பங்கேற்பு




மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலில், காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம் வழிபாடு நடத்தியதன் பலனாக, மான், மழு தரித்து, சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


Diwali Special Buses: நெருங்கும் தீபாவளி; பயணிகளே மொத்தம் 10, 975 சிறப்பு பேருந்துகள் - ஊருக்கு போக ரெடியாகுங்க




அதனைத் தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு, காப்பு கட்டி, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மாங்கல்யதாரணம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து  மகா  தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர்.


Israel Hamas War: போரை நிறுத்த அழைப்பு விடுத்த ஐ.நா.. இணைய சேவையை துண்டித்த இஸ்ரேல் - மோசமாகும் காசா நிலை


சமூக வலைதளங்களில் பரவும் யானையின் வைரல் வீடியோ


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு தலையை ஆட்டி, நாட்டியமாடிய சமயபுரம் யானையின் வீடியோ தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருச்சி சமயபுரத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சுமித்ரா என்ற பெண் யானை தருமபுரம் ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. 



இந்நிலையில் மகா கும்பாபிஷேக விழாவின் மூன்றாம் கால யாக பூஜையின்போது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு யானை சுமித்ரா, தன் தலையை ஆட்டி நடனமாடியது அங்கு இருந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை செல்போனில் பதிவு செய்த பக்தர் ஒருவர் இதனை தனது சமூக வலைதளங்களில் பகிர அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்.. அரசியல் கட்சிகள் என்ன சொல்லப்போகிறது? உயர்மட்ட குழு எடுத்த முடிவு