மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே  கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில். கேது பகவான் கோயில் ( ஸ்தலம்) என அழைக்கப்படும் இந்த கோயிலில் சவுந்தரநாயகி அம்மனுடன் நாகநாதர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராகு - கேதுக்கள் தோஷ பரிகாரம் செய்யும் ஆலயமாகவும் வாசுகி பாம்பு வழிபாடு செய்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார்.




இவர் மனக்கோளாறு, தோல்வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர். கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ள இந்த கோயிலில் கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேது பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கேது பகவான் ஒன்றரை  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்நோக்கி பெயர்ச்சி அடைவதே கேது பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.


Rashid Khan: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; சம்பளத்தை அள்ளிக்கொடுத்த ரஷீத்கான்!




நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு ராசிக்கு 3,6,11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது சோதிட ரீதியான காரணமாகும். தற்போது மேஷ ராசியில் இருக்கும் ராகு மீனத்திற்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது கன்னி ராசிக்கு 2023 செப்டம்பர் 8 -ம் தேதி பெயர்ச்சியடைந்தனர்.


Irugapatru: சூர்யாவின் பாராட்டைப் பெற்ற இறுகப்பற்று... 2வது நாளில் அதிகரிக்கப்பட்ட காட்சிகள்!




அதனைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் 26 வரை அந்த ராசியில் இருப்பர்கள். இந்நிலையில் இன்று துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயிலில்  காலை முதல் சிறப்பு யாகம், தீபாராதனை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய யாக குடங்கள் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயில் தலைமை குருக்கள் கல்யாணசுந்தரம் முன்னிலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.


Manimegalai: அச்சச்சோ! காலில் கட்டு, அடிபட்ட நிலையில் ஃபோட்டோ பகிர்ந்த மணிமேகலை.. ரசிகர்கள் கவலை!




முன்னதாக கேது பகவானுக்கு பால், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகமும், பின்னர் மலர் அலங்காரமும் செய்யபட்டு மதியம் 3.41 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கேது பெயர்ச்சி விழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.  விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்  செய்திருந்தார். மேலும்  மயிலாடுதுறை மாவட்ட காவலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.