மயிலாடுதுறை அருகே கட்டளைசேரி கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பொன்னூர் கட்டளைசேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலயம், பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், நெல்லி கொல்லை மாரியம்மன் ஆலயம், மன்மத சாமி ஆலயம் ஆகிய ஐந்து ஆலயங்கள் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த கோயில்களை அப்பகுதி கிராம மக்கள் புதுப்பித்து ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழா நடத்த முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளுடன், கோயில் கட்டிட வேலை, புதிய சிற்பங்கள் அமைத்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகளுக்கான வேலைகள் நடைபெற்றன. அவைகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் இந்த ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கடந்த 26 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. புனித நீர் அடங்கிய கடன்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு நான்கு கால யாகம் நடைபெற்று வந்தன. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாகுதிக்கு நடைபெற்றது.
Rudraksha: ஆன்மீக பாதையில் இருப்பவருக்கு ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மை என்னென்ன?
பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி ஊர்வலமாக வலம் வந்து கோபுர கலசங்களை அடைந்து. அங்கு பூஜைக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை கொண்டு கும்ப கலச விமானத்திற்கு புனித நீரை ஊற்றி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு