ஆன்மீகம்: தருமபுரம் ஆதீனத்தில் மீண்டும் பட்டணப் பிரவேசம் - ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பிரசித்தி பெற்ற பட்டணப்பிரவேச பல்லக்கு உற்சவம் நடைபெறும் வைகாசி பெருவிழா மற்றும் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.  இதில் 11ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். 

Continues below advertisement


இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டு பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

KK Death Anniversary: இன்றோடு ஓர் ஆண்டுகள்.. காற்றில் கரைந்த கானக்குரல்.. பாடகர் கே.கே.வின் நினைவுநாள் இன்று..!


பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர் அதனைத் தொடர்ந்து பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக  மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.


பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பல்வேறு தடைகளை கடந்து சென்ற ஆண்டு பட்டிணப் பிரவேசம் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இந்தாண்டு தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற விழாவில், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது.


பாரம்பரியமாக நடந்து வரும் பட்டணப் பிரவேச விழாவை கடந்த ஆண்டு நடத்த  தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து இவ்விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான 6-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும்,  8-ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும்,  9-ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 10-ஆம் தேதி தருமபுரம் ஆதினம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  சிவிகை பல்லக்கில்  பட்டண பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கு உள்ளார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola