திருச்சி சமயபுரம் பெண் யானை தருமபுரம் ஆதீனத்துக்கு தானமாக வழங்கப்பட்டதை தொடர்ந்து மேள வாத்தியங்கள் முழங்க யானை ஞானாம்பிகைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.


16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆதீன திருமடம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. தற்போது ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் பிரசித்தி பெற்ற இந்த தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ளே ஆதீனத்திற்கு சொந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் முன்பு இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. 


UGC NET June 2024: யுஜிசி நெட் மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு; முழு அட்டவணை இதோ!




புதிய யானை


அதன் பின்னர் புதிய யானைகளை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக இதுவரை இக்கோயிலில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு யானைகளை பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கி கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி சமயபுரத்தை சேர்ந்த 34 வயது பெண் யானையை (லக்கிமணி) தானமாக தருமபுரம் ஆதீனத்திற்கு தருவதற்கு அதன் உரிமையாளர் சங்கர் முன்வந்தார்.


LLB, LLM Law Admission: எல்எல்பி, எல்எல்எம் சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?




வனத்துறையினர் அனுமதி 


இதற்காக, தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கனவே யானை கொட்டகை கட்டப்பட்டு வனத்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது பெயர் மாற்ற அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, சமயபுரம் யானை, தருமபுரம் ஞானாம்பிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று தருமபுரத்துக்கு வரவழைக்கப்பட்டது. இந்த யானைக்கு, ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்கிருந்து, பசு, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கல சின்னங்களுடன் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், தருமபுரம் வேத சிவ ஆகம பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Minister Sivashankar: ”சோழனுக்கு வரலாறு உண்டு, ஆனால் ராமருக்கு கிடையாது” - அமைச்சர் சிவசங்கர் அதிரடி கருத்து