மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொக்கிச காளியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில்  ஆண்டு தோறும் ஆடி மாத உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு ஆடி மாத உற்சவம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி கரக புறப்பாடு மற்றும் காப்பு கட்டுதளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றனர்.




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் நேற்று நடைபெற்றது.  அதனை அடுத்து வீரன் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் காவடி உற்சவம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக இறுதியில் கோயிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்ட நிலையில், கோயிலில் ஏராளமான சிறுவர்கள்  பக்தி பரவசத்துடன் நடனம் ஆடினர். மேலும், பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில் பழைமை வாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான புற்றுடன் கூடிய நாகதோஷம் நீக்கும் கோயிலாக விளங்கிவரும் இக்கோயிலில் இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாள் திருவிழாவான நேற்றிரவு தீமிதி உற்சவம் நடைபெற்றது. 


Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்




தீமிதியை முன்னிட்டு அம்பாள் உற்சவ மூர்த்திகள் கோபுர வாசலுக்கு சர்வ அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டார். தொடர்ந்து, காப்புக்கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து சக்தி கரகம், மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


Aadi krithigai 2023: ஆடிக்கிருத்திகை: பழனியில் குவிந்த பக்தர்கள்..... காவடிகள் எடுத்தும் , பெண்கள் தீபம் ஏற்றியும் சாமி தரிசனம்