மிகவும் பயமுறுத்தும் தகன மைதானங்களில் ஒன்றாகக் கருதப்படும், வாரணாசியில் உள்ள ஹரிஷ்சந்திரா காட் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்டது. புனிதர்கள், ஞானிகள் மற்றும் சிவபக்தர்கள் குவிந்ததை அடுத்து, அங்கு சாம்பல் மற்றும் அஸ்திகளை கொண்டு ஹோலி கொண்டாடுவதுபோல ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொள்ளும் விசித்திரமான பாரம்பரியம் மேற்கொள்ளப்பட்டது.


மசான் ஹோலி


'மசான் ஹோலி' என குறிப்பிடப்படும் இந்த பாரம்பரியம், ரங்பாரரி ஏகாதசியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசியைப் போலவே பழமையானது என்று கூறப்படும் இந்த பாரம்பரியம் ஹோலிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டு உத்தரபிரதேசத்தின் ஆன்மீக தலைநகரில் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு மாசான் ஹோலி கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக துவங்கியது, பக்தர்கள் அகோர் பீத் பாபா கீனாரம் ஆசிரமத்தில் இருந்து ஷோபா யாத்திரையை மேற்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், அவர்களில் பெரும்பாலோர் சிவபெருமானைப் பின்பற்றுபவர்கள் போல் உடையணிந்திருந்தனர். சோனார்புரா மற்றும் பேலுபுராவை உள்ளடக்கிய ஏறக்குறைய 5 கிமீ நீளமுள்ள ஊர்வலம், ராஜா ஹரிஷ்சந்திர காட்டில் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.



விசித்திரமான கொண்டாட்டம்


"ராஜா ஹரிஷ்சந்திரா காட் முற்றிலும் மாறுபட்டு காட்சியளித்தது. அங்கு மக்கள் ஈமக்காரியங்களுக்கு எரியும் நெருப்புக்கு மத்தியில் ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இது விசித்திரமானது, ஆனால் உண்மை, ”என்று மசான் ஹோலியின் ஒரு பகுதியாக வாரணாசிக்கு வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த மோஹித் சுக்லா கூறினார். ஹரிஷ்சந்திரா காட் அமைப்பாளர்களில் ஒருவரான பவன் சௌத்ரி கூறுகையில், பர்சானா ஹோலி, லத்மர் ஹோலி போன்ற சிறப்பு ஹோலி கொண்டாட்டங்களை மக்கள் சந்தித்திருக்கலாம், ஆனால் காசியின் மசான் ஹோலி மிகவும் தனித்துவமானது. துறவிகள் மற்றும் சாத்விகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் எரியும் கட்டைகளுக்கு மத்தியில் தகன மைதானத்தில் கூடி, முக்தி (மோட்சம்) அடையும் நம்பிக்கையுடன் மரணத்தை கொண்டாடும் பழங்கால பாரம்பரியத்தில் பங்கேற்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Stalin Jacob : 'What a Karwad' துணை நிறுவனரும், பிரபல புகைப்பட கலைஞருமான ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..


மசான் ஹோலி வரலாறு


டோம் சமூகத்தைச் சேர்ந்த சவுத்ரி, ஹோலி முற்றிலும் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவது உறுதி என்று கூறுகிறார். இந்து புராணங்களின்படி, சிவபெருமான் மஹாசிவராத்திரி அன்று பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் பார்வதியின் தாய் வீட்டில் தங்கியிருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ரங்பாரதி ஏகாதசி அன்று, சிவபெருமான் அவளை திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக காசிக்கு அழைத்து வந்தார் என்று நம்பப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோவிலில் பார்வதி தேவியின் வருகையை சிவபெருமானின் பக்தர்கள் கொண்டாடியதாக நம்பப்படுகிறது, ஆனால் சிவனைப் பின்பற்றுபவர்களுக்கு வண்ணங்களுடன் ஹோலி கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே சாம்பலைப் பயன்படுத்தி அவர்களுடன் ஹோலி கொண்டாட இறைவனே தகன மைதானத்திற்கு வந்தார் என்று நம்பப்படுகிறது.



மிகவும் பிரபலமான கொண்டாட்டம்


உலகின் மிகப்பெரிய தகனம் செய்யும் இடமான மணிகர்னிகா காட்டில் மசான் ஹோலி கொண்டாடப்படுகிறது. "மணிகர்னிகா காட்டில், ரங்பாரதி ஏகாதசிக்கு ஒரு நாள் கழித்து (சனிக்கிழமை) மசான் ஹோலி அனுசரிக்கப்படுகிறது" என்று மணிகர்னிகா காட்டில் உள்ள மசான் ஹோலியின் அமைப்பாளர் குல்ஷன் கூறினார். நீண்ட காலமாக, மசான் ஹோலி புனிதர்கள் மற்றும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், சில குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய முன்வந்தபோது இந்த பாரம்பரியம் பிரபலமடைந்தது.


மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், மசான் ஹோலி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. “காசியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசான் ஹோலி ஒரு முக்கிய ஈர்ப்பு உள்ளது. இது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது, ஏனெனில் அவர்கள் காசியில் மட்டுமே கடைபிடிக்கப்படும் இந்த தனித்துவமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள், ”என்று உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையின் வாரணாசி சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் ப்ரீத்தி ஸ்ரீவஸ்தவா கூறினார்.