இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஒன்பது நாட்கள் கொண்டாடும் பண்டிகை ஆகும். நவம் என்பதற்கு ஒன்பது என்று பொருள் ஆகும்.


மூன்று தேவிகளின் விழா:


ஒரு மனிதனின் வாழ்விற்கு அவனை வழிநடத்தும் கல்வி, எந்த சிக்கலையும் தாங்குவதற்கான மன வலிமையையும், உடல் வலிமையையும் அளிக்கும் வீரம், செழிப்புடன் வாழ்வதற்கான செல்வத்தை தரும் கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றை தரும் முப்பெரும் தேவிகளை இந்த நவராத்திரியில் வழிபடுகிறோம்.


துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும், 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.


நவராத்திரி எப்போது? | When is Navratri 2023 Celebrated


நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்காதேவிக்காக வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த 3 நாட்களும் துர்காதேவியின் ஆட்சிக்காலம் ஆகும், இதில் துர்காதேவிக்கு வழிபாடு செய்யப்படுகிறது. வீரத்தை அளிப்பதற்காக இந்த நாட்களில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது.


நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15-ம் தேதி தொடங்குகிறது. வரும் அக்டோபர் 24-ந் தேதி விஜயதசமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடைகிறது. இந்த 9 நாட்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


வழிபாடு:


இந்த 9 நாட்களும் வீடுகளில் கொலு பண்டிகை நடத்தப்படுகிறது. அதாவது, ஏராளமான பொம்மைகளை வீடுகளில் வைத்து அலங்கரித்து பெண்கள் சேர்ந்து பூஜை செய்வார்கள். நவராத்திரியின் 8வது நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை தமிழ்நாட்டில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம் தொழில் நிறுவனங்களை சுத்தம் செய்து தொழிலாளர்கள் தாங்கள் செய்யும் தொழிலே தெய்வம் என வணங்குவார்கள். வீடுகளில் மாணவர்களின் புத்தகங்கள், பேனாக்கள் வைத்து வழிபாடு செய்வார்கள்.  


விஜயதசமி பண்டிகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நவராத்திரி வழிபாட்டை முன்னிட்டு விரதம் இருந்து வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும். உடல்நலக்குறைவு உள்ளவர்கள் விரதம் இருப்பதை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.


மேலும் படிக்க: October 2023 Festivals: சரஸ்வதி பூஜை, விஜயதசமி.. அக்டோபர் மாதம் என்ன தேதியில் என்ன விசம்? முழு விவரம்


மேலும் படிக்க: Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? அறிவிப்பை வெளியிட்ட கோயில் நிர்வாகம்..