சீர்காழி அருகே விடங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் ருத்ராட்சம் கொண்டு உருவாக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு நடைபெற்ற மகா ருத்ர ஹோமத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மகாசிவராத்திரி என்பது சிவபெருமானை வழிபட்டு, அவரின் அருளை முழுமையாக பெறுவதற்குரிய நாளாக நம்பப்படும் இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் இந்தியாவில் சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு மகாசிவராத்திரியானது நேற்றிரவு மார்ச் 8-ம் தேதி நாடுமுழுவதும் பக்தர்கள் கண்விழித்து விடிய விடிய பல்வேறு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார்.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய சிவராத்திரி, பிரதோஷ விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு




அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தில் சந்திரனுக்கு தட்சன் இட்ட சாபத்தால் சந்திரனின் கலைத்திறன்கள் ஒவ்வொன்றாக பறிபோக, மனம் வருந்திய சந்திரன் நாரத மகரிஷியிடம் தன் துன்பத்தை எடுத்துரைக்க, அவர் பூலோகத்தில் பொற்சபையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தில்லைநாதனை வேண்டி தவம் இயற்றிட உமக்கு நற்பயன் கிட்டும் என ஆசி வழங்கியுள்ளார். அதன்படி சிவ பூஜை செய்ய நினைத்த சந்திரன், தில்லை அம்பலத்திற்கு தெற்கே நீர் வளமும், நிலவளமும் ஒருங்கே பெற்ற பசுமையான அமைதியான ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே சந்திர புஷ்கரணியை நிறுவி அதன் மேற்கு கரையில் ஓர் சிவலிங்கத்தை நிறுவி அதனை தில்லை நாயகனாக நினைத்து தவமிருந்தார்.


Maha Shivaratri 2024: பரதம், கதக், குச்சிப்புடி, மோகினியாட்டம் - மெய் சிலிர்க்க வைத்த மாயூரநாதர் கோயில் மகா சிவராத்திரி!




அதன் பயனாக எம்பெருமான் அம்மையுடன் தில்லை நாதராகவே  தோன்றி ஆசி வழங்கியதில் சாபம் நீங்கப் பெற்றார் சந்திர பகவான். இவ்வாறு தில்லைநாயகி உடன் தோன்றி இறைவன் சந்திரனின் சாபம் நீங்கிய இடமே இன்று தில்லைவிடங்கன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு சந்திரன் பரிகார தலமாக விளங்கி வருகிறது.  இத்தகைய சிறப்பு மிக்க ஸ்தல வரலாற்றை கொண்டு ஆதி நவகிரக சந்திரன் பரிகார ஸ்தலமாக அமைந்து, அருள் பாலித்து கொண்டிருக்கும் தில்லைநாயகி உடனுறை அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 ஆயிரம் ருத்ராட்சத்தை கொண்டு மகா சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.


Maha Shivaratri 2024: மயிலாடுதுறை சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்




அந்த சிவலிங்கத்திற்கு கல்யாணகுமார் தலைமையில் சிவாச்சாரியார்கள் மகா ருத்ர ஹோமம் செய்விக்கப்பட்டு  பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தில்லைவிடங்கன் கிராம மக்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மகா ருத்ர ஹோமத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ருத்ராட்சத்தால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.


Maha Shivratri: " மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” - துணை ஜனாதிபதி நெகிழ்ச்சி..