மகா சிவராத்திரி முன்னிட்டு திருவெண்காடு புதன் ஸ்தலம், வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலம், திருஞானசம்பந்தர் அவதாரித்து ஞானம் பெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயிலிலும் விடிய , விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிவாலயங்களில் விடிய விட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் வழிபாட்டு செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அடுத்த திருவெண்காடு (புதன் ஸ்தலம்) சுவேதாரணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை ஒட்டி கோயமுத்தூர், சென்னை, சேலம், மாமல்லபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா சிவராத்திரி வழிபாடுடன் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மாமல்லபுரத்தில் இருந்து ஏராளமான சிறுமிகள் கலந்து கொண்டு சிறப்பாக நாட்டிய அஞ்சலி செய்தனர். சென்னையை சேர்ந்த பிரபல நாட்டியஞ்சலி கலைஞர் செல்வி நிவேதா ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.
Maha Shivaratri: களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்!
இதேபோல் சீர்காழி அடுத்த செவ்வாய் ஸ்தலமாக இருக்கக்கூடிய வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலிலும் பௌர்ணமி வழிபாட்டு மன்றம் ஸ்ரீ முத்தையா அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை ஒட்டி வைத்தீஸ்வரா நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நடன கலைஞர்கள் பங்கேற்று விடிய விடிய பரதநாட்டியம் ஆடினர். முன்னதாக பஞ்சாட்ஷர ஜெபத்துடன் 3008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு நான்கு கால பூஜைகள் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடந்த சிவராத்திரி பூஜை! பக்தியில் திளைத்த பக்தர்கள்!
அதேபோன்று சீர்காழி சட்டைநாதர் கோயிலிலும் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளும், அதன் ஒருபகுதியாக பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் விடிய விடிய நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார சிவாலயங்களில் சுற்று வட்டார பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய சிவாலயங்களில் வழிபாடு மேற்கொண்டனர்.