Maha Shivaratri 2024: சிவராத்திரி தினத்தில் உருவான பனிக்கட்டி சிவலிங்கம் - பரவசமடைந்த பக்தர்கள்

சிவராத்திரியை முன்னிட்டு பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கத்தை பக்தர்கள் கண்டு வழிபாடு செய்தனர்.

Continues below advertisement

 

Continues below advertisement

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிவாலயங்களில் விடிய விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் வழிபாட்டு செய்து வழிபட்டனர்.  இதில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த  அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் அமர்நாத் பனி லிங்கம் போன்று  6 அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  

Maha Shivratri: " மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” - துணை ஜனாதிபதி நெகிழ்ச்சி..


அறுபத்து மூவர் பேட்டையில் அமைந்துள்ள சப்த மாதா பிடாரி அம்மன் ஆலய வளாகத்தில் இந்த ஆண்டு பனிலிங்கம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து மலர்மாலைகள் மற்றும் தாமரை மணி மாலை ஆகியவை லிங்கத்துக்கு சாற்றப்பட்டு கோ பூஜை நடைபெற்றது. பின்னர், பனி லிங்கத்திற்கு  மகா தீபாராதனை நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 12 ஆண்டுகளாக மயிலாடுதுறையில் சிவராத்திரியன்று பனிலிங்கம் வைக்கப்பட்டு பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Maha Shivaratri 2024: மயிலாடுதுறை சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்


இந்த பூஜையின் போது பாரதிய ஜனதா கட்சியினர் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி செய்ய வேண்டும் என அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பனி லிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்து தரிசனம் செய்தனர்.

PM Modi: கசிரங்கா பூங்காவில் யானை சஃபாரி சென்ற மோடி.. புகைப்படம் பகிர்ந்து நெகிழ்ந்த பிரதமர்..

Continues below advertisement
Sponsored Links by Taboola