சீர்காழி அருகே வலம்புரி விநாயகர் மற்றும் முருக பெருமான் கோயில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலாலசுந்தரம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த முருக பெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் திருப்பணிகள் செய்யப்பட்டு  அருகிலேயே வலம்புரி விநாயகருக்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில்களின் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது.


Miss Universe 2023: 2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!




தொடர்ந்து இன்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து. பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை அடுத்து யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமானத்தை அடைந்தனர். அங்கு மேளதாள மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மௌன மடம் சுவாமிகள் முன்னிலையில் கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு விநாயகர் மற்றும் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.


Mansoor Ali Khan Trisha Video: நடிகை குறித்து தவறாக பேசிய மன்சூர் அலிகானிற்கு நடிகர் சங்கம் கண்டனம்...மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்




தொடர்ந்து முருக பெருமானுக்கும், விநாயகருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆலாலசுந்தரம் மற்றும் இன்றி பல்வேறு கிராமங்களில் இருந்தும்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Miss Universe 2023: 2023-ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ஷெய்னிஸ் பலாசியோஸ்!