தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அனுவித்த பிறகு சுவாமிக்கு வெள்ளி கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே, உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகவாலீஸ்வரர் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி,மஞ்சள், திருமஞ்சனம் பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமான் பாகவல்லி அம்பிகை சமேத மேகவாதிஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், பின்னம் சத்திரம் அருகே புண்ணம் பகுதியில் உள்ள உடனுறை புன்னைவன நாயகி கோயில் உள்ள நந்தியம்பெருமான், திருக்காடுதுறை மாதேஸ்வரி, அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயில், உள்ள நந்திய பெருமாள் குந்தாணி பாளையம் நத்தமேடு, ஈஸ்வரன் கோயிலில் உள்ள நந்தியம்பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்திய பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.