தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. கடந்த 2023-ல் 4ஆவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


திருமணத்திற்கு முன்னதாக நரேஷ் பாபு மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தங்கிருந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது ஒருவருக்கொருவர் லிப் லாக் கொடுத்த புகைப்படங்களும் வைரலானது.


நரேஷ் பாபு முதல் முறையாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவீன் - விஜய்கிருஷ்ணா என்ற மகன்கள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 2ஆவதாக, ரேகா சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல கவிஞரான தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி. நரேஷ் பாபு மற்றும் ரேகா சுப்ரியா தம்பதியினருக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார்.


எனக்கு 60 உனக்கு 44! காலம் போன வயசுல நடிகருக்கு வந்த காதல்; 1500 கோடிக்காக.. 4-வது மனைவியான நடிகை!


தொடர்ந்து 2ஆவது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டு 3ஆவதாக ரம்யா ரகுபதி என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், ரம்யாவை விவாகரத்து செய்துவிட்டு 4ஆவதாக கன்னட நடிகை பவித்ரா லோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


திருமணத்திற்கு முன்னதாக இருவரும் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த போது நரேஷிற்கு வயது 60, பவித்ரா லோகேஷிற்கு வயது 44. இதில் பவித்ரா லோகேஷூம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மல்லி பெல்லி என்ற படம் மூலமாக நரேஷ் பாபு மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், 2023ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தான் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுரேந்திர பிரசாத் தனது முதல் மனைவி பவித்ரா பற்றி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.


ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடிய பவித்ரா லோகேஷ். காசு, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அதனால தான் ரூ.1500 கோடி சொத்துக்கு அதிபதியான நரேஷ் பாபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறியிருக்கிறார்.