மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலமங்கநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் வேண்டும் வரம் அனைத்து  விரைவாக ஈடேரும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தில் தீமிதி உற்சவ திருவிழா கடந்த மாதம் ஜூலை 31-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. 




விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். 


PM Modi South Africa Tour: 40 வருடங்களுக்குப் பின் கிரீஸ்.. தென்னாப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி : பிரிக்ஸ் மாநாடு




விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர் ஒருவர் தலையில் கரகத்தை வைத்து நடனமாடிய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது‌‌.