விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திண்டுக்கல்லில் உள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 2000 தென்னங்கன்றுகள் மத்தியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் 


Vinayagar Chaturthi 2022 LIVE: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - நிபந்தனை விதித்த நீதிமன்றம்




நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் விநயாகர் சிலைக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்கள் உள்ள இடங்களில் இன்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 


குறிப்பாக விநாயகர் சிலைக்கு பண மாலைகள், கொளுக்கட்டை மாலைகள், பூக்கள், காய்கறிகள்  போன்றவைகள் மூலம் அலங்கரித்து வித்தியாசமான அலங்காரங்களுடன்  விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.


Cobra Review: படம் எடுத்ததா? படுத்ததா? விக்ரமின் கோப்ரா படம் எப்படி இருக்கு..? - திரைவிமர்சனம்!


அதே போலதான் திண்டுக்கல் மாவட்டம் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு விவசாயம் செழித்து, மக்கள் நோய் நொடியின்றி இன்புற்று வாழ்வதற்காக 2000 தென்னங்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.


HBD Yuvan: சொக்க வைக்கும் குரல்...கட்டிப்போடும் பின்னணி இசை...பிஜிஎம் கிங் யுவன் பிறந்தநாள் இன்று..!




பல தார திருமணம்.. நிக்காஹ் ஹலாலா.. முஸ்லீம் தனிநபர் சட்டத்திற்கு முற்றுப்புள்ளியா? விசாரணையை தொடங்கிய உச்சநீதிமன்றம்


இதேபோல் ஆலயத்தில் உள்ள 108 விநாயகருக்கும் பரிவார தெய்வங்களான காளகஸ்தீஸ்வரர், அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வண்ண வண்ண செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண