பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கடந்த 21- ஆம் தேதி கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து காப்பு கட்டி 15 நாள் வேண்டுதல் விரதத்தை தொடங்கினர்.


MK Stalin: கலவரம் செய்து திமுக ஆட்சியை அகற்ற சதி.. முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆவேசம்..




அம்மன் குளத்தில் இருந்து கம்பம் எடுத்து வந்து கோவிலில் ஊன்றி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் தேர் சட்டம் போடும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் ஊர்வலம் வந்து அருள் பாலித்தார்.


சிவகங்கை : 101 கிடாய் வெட்டி விருந்து ; வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட பச்சை குடில் திருவிழா


நேற்று மஞ்சள் பாவாடை சாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழாவான இன்று அதிகாலை முதலே 25,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர், சிறுமிகள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்த அம்மன் குளத்தில் வழிபாடு செய்து அக்னி வளர்த்து  6 அடி முதல் 12 அடி நீளம் கொண்ட அழகு குத்தியும் 10 அடி முதல் 12 அடி வரை பறவை காவடி எடுத்தும் அக்னி சட்டி  பால்குடம் எடுத்து திண்டுக்கல் ரோடு வழியாக மாரியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்து பெரிய கடை வீதி, காவல் நிலையம் பேருந்து நிலையம் வழியாக மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் சென்று பின்னர் மீண்டும் அம்மன் குளம் வந்து அக்னி சட்டியை இரக்கி வைத்து விட்டு வழிபாடு செய்தனர்.


ராஜஸ்தானில் திருச்சி தனிப்படை போலீசார் சிறை பிடிப்பு - காரணம் என்ன?


பின்னர் இதனை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சிக்காக காந்தி நகர் பொதுமக்கள் சார்பில் மாரியம்மன் கோவில் முன்பு 50 அடி  உயரம் கொண்ட இந்த வழுக்கு மரத்திற்கு  விளக்கெண்ணெய், கற்றாழை, மற்றும் கேழ்வரகு உள்ளிட்ட நவதானிய எண்ணெய்களை மரத்தில் தேய்த்து வழுக்கும் தன்மை கொண்டதாக மாற்றி பின்னர் கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்கள் கோஷங்கள் முழங்க ஊன்றப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண