திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கோயில் மண்டபத்தில் 6 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக புண்ணியாகவாஜனம், விநாயகர் பூஜை, சிவ, கந்தஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் விநாயகர், கைலாசநாதர், சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருடாபிஷேகத்தையொட்டி மாலை 6 மணிக்கு கைலாசநாதர்-பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை தங்கமயில் வாகனத்திலும், ரிஷப வாகனத்தில் பஞ்மூர்த்தியும் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில், கோவில் கண்காணிப்பாளர் அழகர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்தனர்.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவார பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. முன்னதாக உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் லிங்க வடிவில் 1,008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Ruturaj Gaikwad: 7 சிக்ஸர்களுடன் ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்த சாதனைகள்..!
தொடர்ந்து 108 மூலிகைகளால் ஆன பொருட்கள் யாகத்தில் பயன்படுத்தப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்