பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஆறாம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை தேரடியில் நடைபெற்றது.


Thaipusam 2023: அரோகரா.. அரோகரா.. உலக முருக கோயில்களில் கோலாகலம்.. பரவசமாய் குவியும் பக்தர்கள்..!




ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.29-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார். விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை ஏழு மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது.


Breaking News LIVE: விரைவில் மாதாந்திர மின்கட்டணம் மீண்டும் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி




மண்டபம் எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு முன்பாக பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.  மங்கலநாணுக்கு பூஜைகள் நடைபெற்ற பின் மங்கலநாண் அணிவித்தல் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மங்கலபிரசாதம் வழங்கப்பட்டது.


T. P. Gajendran Passes Away: பெரும் சோகம்.. இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!


திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதராக முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரத வீதிகளிலும் ஆடி அசைந்து உலா வந்தது.  இதனை தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவிலில் பத்து நாட்கள்  நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம் நேற்று நடைபெற்றது‌.


Thaipusam 2023:பெருநகரில் கூடிய பக்தர்கள்... தைப்பூசப் பெருவிழாவான இன்று இங்கு என்ன நடக்கும் தெரியுமா?


தைப்பூசத்தின் ஏழாம் நாளான இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வள்ளி,தெய்வானை சமேதராக தேரேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிவில் இருந்து பரிவாரங்களுடன் புறப்பட்ட முத்துக்குமாரசாமி கோவிலுக்கு எதிரில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டைத்தேரில் வீற்றார்.  தொடர்ந்து விநாயகர், நவவீரர்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் தேரேறி அமர்ந்தனர். தேரேற்றத்தை தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டது‌. தொடர்ந்து மாலை நான்கு ரதவீதிகளிலும் தேர்பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண