கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்தனர். அருவியில் ஆனந்த குளியலிட்ட பின்னர் அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் உள்ள பிரசித்திபெற்ற கைலாச நாதர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தேனி அருகே முல்லை பெரியாறு ஆற்று ஓரத்தில் அழகிய தோற்றத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே குவிந்தனர்.


PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..


ஆற்றில் புனித நீராடிய பின்னர் கோவிலில் வழிபாடு செய்தனர். போடி அருகே உள்ள மேல சொக்க நாதர் திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ள பிரசித்திபெற்ற கம்பராய பெருமாள் மற்றும் காசி விஸ்வ நாதர் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய வந்தனர்.


தைப்பொங்கலுக்கு தயாராகும் கரும்பு..நல்ல விளைச்சலால் தேனி விவசாயிகள் மகிழ்ச்சி..!


ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி பகுதியில் உள்ள அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவூற்று வேலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டன. மேலும் இந்த சிறப்பு பூஜையில் ஆண்டிபட்டி, தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


TN Rain Alert: அரபிக்கடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..



New Year Wishes 2024: வந்துவிட்டது புது ஆண்டு.. நண்பர்கள், உறவினர்களுக்கு உடனே இப்படி ஒரு வாழ்த்தை தட்டிவிடுங்க..


மேலும் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து தங்களின் நேர்த்திக்கடன்களை தொடங்கி வைத்தனர் .இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு சென்று பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் ஆண்டிபட்டியில் இருந்து இயக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்தினர்இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும் , சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.