தமிழகத்தில் தொன்மையான ஆதீனங்களில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் உள்ள  தருமபுரம் ஆதீனம் விளங்கி வருகிறது. இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதி  தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு தனது அருளாசியை வழங்கியுள்ளார் அதில் அவர் கூறியதாவது: தீபாவளி என்பது தீபத்தை வரிசையாக வைத்து வழிபாடு செய்வது. இருள் நீக்கி ஒளி கொடுப்பது. அகந்தையை நீக்கி, ஆணவத்தை நீக்கி தன்னருள் புரிவது. இதுதான் ‘தீபாவளி’ தத்துவமாக விளங்குகிறது. ஏழைகளாக இருந்தால் கூட அன்றைய நாள் புத்தாடை அணிந்து இனிப்பு பண்டங்கள் உண்டு, அனைவருக்கும் ஈத்துவக்கும் இன்பம் என்பதற்கு இணங்க எல்லா சமயங்கள் மதங்கள் சாதிகளை கடந்து அனைவரும் சேர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழாவாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.




இது தேவர்களை கொடுமை செய்த நரகாசுரன் என்கின்ற ஒரு அசுரனை மகாவிஷ்ணு வதம் செய்த நாளாகும். அப்போது “நரகாசுரன் நான் இவ்வளவு நாட்களாக மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி விட்டேன். ஆகையினால் நான் இறந்த நாளை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்” என்று சொல்ல, அதே போன்று இறைவன் அருளையும் அவனுக்குத் தந்து சம்காரம் செய்கிறார். அந்த நினைவு நாளாக எல்லோரும் புத்தாடை அணிந்து, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய நாளில் வெந்நீர் என்பது கங்கையாகி. எண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்  பின்னர் இனிப்புகள் உண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ வேண்டும்.


Diwali 2022 : தங்கம், வெள்ளி நகைகள் பளிச்சிடணுமா? மத்தாப்பு தீபாவளி ஜொலிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..




மழைக்காலம் என்பதால் சிறு சிறு பூச்சிகள் மக்களை சுற்றிக் கொண்டிருக்கும். பட்டாசு மூலம் சுவாசக் காற்று மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு சாஸ்திரத்திற்காக மட்டும் ஓரிரு பட்டாசுகளை மட்டும் வெடித்து மகிழ வேண்டும். இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்கள் இருக்கின்ற காரணத்தினால், அதிக பட்டாசுகள் வெடித்து அவைகளை துன்புறுத்த வேண்டாம் என தெரிவித்திருக்கின்றோம். நம்மைச் சுற்றி இருக்கின்ற அசுர குணங்கள் அழிவதையே இந்த தீபாவளி நாளாக கொண்டாடுகிறோம் அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெற்றும் இருள் நீங்கி ஒளிபெற்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தனது அருளாசி உரையில் தெரிவித்துள்ளார்.


Shaktimaan: சக்திமான் படத்தை இயக்கும் ‘மின்னல் முரளி’ இயக்குநர்? எதிர்பார்ப்பை எகிறவைத்த அப்டேட்..


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற