திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பைபட்டி கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது.
24-ந் தேதி தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், கருப்பணசாமி, மூலவர், நவக்கிரக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கிடாவெட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணி முதல் கருப்பணசாமி சன்னதி முன்பு ஆடுகள் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. சாமிக்கு வேண்டுதல் செய்த பக்தர்கள், அடுத்தடுத்து ஆடுகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர். அவை ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டன. அதன்படி 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டனர்.
இதனையடுத்து கோவில் வளாகத்திலேயே ஆடுகள் உரிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. இதேபோல் கோழி இறைச்சியும் தயாரானது. இதைத்தொடர்ந்து சமையல் செய்யும் பணி நடந்தது. அரிசி சாதம் சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பு தயாரானது. இதைத்தொடர்ந்து சாமிக்கு படையலிட்டு அன்னதானம் தொடங்கியது. மதியம் தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடந்தது.
12th Public Exam Result: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 8ம் தேதி ரிசல்ட் - எப்படி தெரிந்து கொள்வது?
Kodanad Case: கோடநாடு வழக்கு; எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம் - என்ன காரணம்?
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர். இது தொடர்பாக விழா கமிட்டியாளர்கள் கூறுகையில் சித்திரை திருவிழா நடைபெறும் நாளில் மழை பெய்ய வேண்டி ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அதன்படி நேற்று நடந்த திருவிழாவின்போது மழை பெய்தது. இது, பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்