மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள  பிரசித்தி பெற்ற சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சோழீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தில் உள்ள சுவாமியை சூரியன், சந்திரன், சனி பகவான் ஆகியோர் வணங்கி தங்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். 




இத்தலம் சனிபகவானின் சாப, தோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. இங்கு  சனீஸ்வர பகவான் நின்ற கோலத்தில், கைகூப்பியபடி, அமிர்த கலசத்தை கையில் ஏந்தியவாறு பொங்கு சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சியளித்து சனி  பரிகார தெய்வமாக  விளங்குகிறார். இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயில் புனரமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.


CM MK Stalin: இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..




இதனை முன்னிட்டு  கடந்த 6 -ம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு 6 கால யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில்  நேற்றிரவு  5 -ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் நடைபெற்று பூரணாகுதி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Mission Impossible 7: ரூ.4,600 கோடி வசூலித்தும் நஷ்டம்தானாம்..! டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிளை ஓடவிட்ட பார்பி, நோலன்