இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான கோவில்களில் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகம் நடத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 26 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை இந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக 1,000-வது கும்பாபிஷேகம் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று (10-ஆம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் இராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கௌமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள். சிவநெறிச் செம்மல் கே.பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சீர்வளர்சீர் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது எல்லார்க்கும் எல்லாம்" என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக @tnhrcedept-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-வது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் @PKSekarbabu அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
CM Stalin: அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி20 மாநாட்டில் நடந்தது என்ன?