CM MK Stalin: இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு கீழ் இயங்கி வருவது இந்து சமய அறநிலைத்துறை. கோயில் கும்பாபிஷேகங்கள், கோயில் திருவிழாக்கள் ஆகியவை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து சமய அறநிலைத்துறையின் ஒரு மைல் கல்லாக 1000 வது குடமுழுக்கு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கேசர்பாபு கலந்துக்கொண்டார். அப்போது இந்த கோயிலுக்கான கும்பாபிஷேக விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலைத்துறையின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எல்லார்க்கும் எல்லாம் என்ற   திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறையின்  செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் சேகர்பாபு அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ” சீதனச்சேரியில் உள்ள 300 ஆண்டு பழமையான கோவிலை குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது. ராணிப்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் 150 ஆண்டு பழமையான கோவிலுக்கு திருப்பணி நடைபெறாமல் இருந்தது கோவிலுக்கு  குடமுழுக்கு விழா நடைபெற்றிருக்கிறது. அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதிகளில் திமுக ஆட்சி பொறுப்பேற்றுடன் ரூபாய் ஒரு லட்சம் அந்தத் திருப்பணிகளுக்காக அரசின் சார்பாக இந்து அறநிலைத்துறை  சார்பாக வழங்கப்பட்ட நிதியை இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தியது 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களுக்கு மட்டும்தான் திருப்பணிகள் அதிமுக நடத்தி இருந்தார்கள்.

 திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தி கொடுத்து ஆயிரம் திருக்கோயில்களை  1250 ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கின்ற கோவில்களும் கிராமப்புறத்தில் இருக்கின்ற திருக்கோவில்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்ச ரூபாய் உயர்த்தி  இருக்கிறார்.
இந்த 2  ஆண்டுகளில் மட்டும் ஐயாயிரம் கிராமப்புறம்  மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கின்ற திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு 100 கோடி ரூபாய்  வழங்கி இருக்கிறார்.

 அதேபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு  2022 -23 ஆண்டுகளில்  100 கோடி ஒதுக்கீடு செய்து உபதாயர் நிதி 40 கோடியை சேர்த்து 113 திருக்கோவில்களுக்கு தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் 2023 -2024 ஆண்டுக்கு 160 கோடியை ஒதுக்கீடு செய்து 100 கோடி ரூபாய் செலவில் 84 திருக்கோவில்களுக்கு தற்போது குடமுழுக்கு பணிகளுக்கான திருப்பணிகள்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருந்த 12957 கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் வைப்பு நிதி இருந்தது , ஒரே தவணையாக திமுக ஆட்சியில் ஒரு லட்ச ரூபாய் இருந்து 2 லட்ச ரூபாயாக உயர்த்தி 129.50 கோடியை ஒரே தவணையாக ஒதுக்கீடு செய்தது. அதேபோல் அந்த திருக்கோயிலில் பணிபுரிய கூடிய பத்தாயிரம் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கினார்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Continues below advertisement