மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.




சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய சட்டைநாதர் கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 


TN Rain Alert: ஏப்ரல் 30, மே 1 மழை இருக்கு! இன்றைய வானிலை செய்தி இதோ..




இந்நிலையில், சட்டநாதர் கோயிலில் கடந்த மார்ச் 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சிலைகள், செப்பேடுகள் அனைத்தும் சீர்காழி சட்டைநாதர் கோயிலிலேயே  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகள் மற்றும் செப்பேடுகள் தொடர்பாக அரசு சார்பில் அவ்வப்போது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றனர். இந்த ஆய்வுகளில் முடிவில் இவைகள் யாருக்கும் சொந்தம் என முடிவாகும்.


Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?




இது ஒருபுறம் இருக்க இன்று இந்த சிலைகள் செப்பேடுகள் கிடைத்த இடத்திற்கு திருமுறை ஈன்ற தெய்வத்தமிழ்மண் என தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பெயர் சூட்டி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பெயர் பலகை வைக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் பதியப்பட்டுள்ள திருமுறைகளை பேனராக அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பெயர் பலகை மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து தருமை ஆதினம்  தீபாரதனை காட்டினார்.


Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண