மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் திருமண தம்பதிகள் காவிரி படித்துறையில் மங்கலப் பொருட்களை வைத்து படையல் இட்டும், புதுமணத் தம்பதியினர் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெற்றது. "காவிரி பாய்ந்து ஓடி. விவசாயத்தை செழிக்க வைக்கும் காவிரி அன்னையை வரவேற்று காவிரி பாயும் அனைத்து பகுதிகளிலும் ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரிதாயை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காவிரி கரையில் படையலிட்டு வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்ட காவிரி படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில், காமாட்சி விளக்கு, கண்ணாடி, வளையல், கருகமணி, தேங்காய், பழங்கள், மாவிளக்கு, காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையல் இட்டு ஏராளமான பெண்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த வழிபாட்டில் வேண்டுவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் புதுமண தம்பதியினர் இன்றைய தினத்தில் தங்களது தாலியை பிரித்து புது தாலியை அணிந்து கொண்டனர். காவிரி துலாக் கட்டத்தில் இரண்டு கரைகளிலும் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் படித்துறையில் பூஜை நடத்தி காவிரியை வழிபட்டு வருகின்றனர்.
Crime: பெற்றோரே உஷார்! 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்... என்ன நடந்தது? ஷாக்!
மேலும், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள காவிரித்தாய் சிலைக்கு மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துவரப்பட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோன்று காவிரி கடைமடை பகுதியான குடகு மலையில் உருவாகும் காவிரி கடைசியாக கடலில் சங்கமிக்கும் பூம்புகாரிலிலும் திரளான பக்தர்கள் ஆடி பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். இப்பகுதியில் மயிலாடுதுறை காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும், நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.