திருவாரூர் கமலாலயக் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

 

ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர். விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் மே 12 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், வலங்கைமான், கொரடாச்சேரி, நீடாமங்கலம், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் சென்றாலும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக அரிசி. கருவேலை. கருமணி. பழங்கள் ஆகியவற்றை வைத்து நீர் நிலைக்கு வழிபாடு செய்தனர்.



 

குறிப்பாக கடந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடிய நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணமாக ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் சென்றாலும் குடும்பத்துடன் வந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய கரையில் புதுமண தம்பதிகளும்,பெண்கள் சிறுவர்கள் என பலர் திரண்டு வந்து குளக்கரையில் பூஜை நடத்தி வழிபட்டனர்.



 

குறிப்பாக சுமங்கலி பெண்கள் அரிசி பழம் போன்றவற்றை வைத்து பூஜை நடத்தி தீபாரதனை காண்பித்து பின்பு பழம் அரிசி போன்றவற்றை நீரில் விட்டனர். காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அந்த நீரால் தானியங்கள் விளைந்து பொதுமக்களுக்கு உணவு பஞ்சம் இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும் நீர்நிலைகளுக்கும் நீருக்கும் நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறுகளை மாறி மாறி கட்டி கொண்டனர்.வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் மஞ்சள் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண