Crime: பெற்றோரின் கவனக்குறைவால் கர்நாடகா மாநிலத்தில் 8 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய நிலை:
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளை தவிற அனைவரும் தனித்தனியே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், இன்றைய சூழ்நிலையில், பள்ளி மாணவர்களும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடுகளில் பிளக் பாயிண்டுகளில் எப்போது சார்ஜர் அப்படியே இருக்கும். இப்படி எப்போதும் பயன்படுத்தும் சார்ஜரை நாம் சரியாக கையாளுகிறோமா என்றால் அது கேள்விகுறிதான். வேலைக்கு செல்லும் அவசரத்தில் பிளக் பாயிண்டுகளில் இருக்கும் சார்ஜரை தனியாக எடுத்து வைப்பதோ, அல்லது ஸ்வீட்சை கூட ஆப் செய்யாமல் தான் இருக்கிறோம். இத்தகைய அலட்சியப்போக்கு இருந்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், கர்நாடகாவில் பெற்றோரின் அலட்சியதால் 8 மாத குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 மாத குழந்தை:
கர்நாடாக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ கல்லுட்கர். இவர் ஹெஸ்காம் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை, குழந்தை வீட்டில் படுத்துக் கொண்டிருந்தது. குழந்தைக்கு அருகில் பிளக் பாயிண்டில் சார்ஜர் தொங்கிக் கொண்டிருந்தது.
குழந்தை உயிரிழப்பு:
அதில், பிளக் பாயிண்டுக்கான ஸ்வீட்ச் ஆப் செய்யாமல் இருந்துள்ளது. இந்த நேரத்தில் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது தான், எதிர்பாராத விபதமாக அந்த 8 மாத குழந்தை செல்போன் சார்ஜரை தனது வாயில் வைத்தது. இதனால் 8 மாத குழந்தையின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை அறிந்த பெற்றோர், பதறி அடித்து குழந்தையை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் குழந்தையின் உடலை பார்த்து கதற அழுது உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர். சார்ஜரால் எட்டு மாத குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Theeran Chinnamalai Memorial Day: வீராதி வீரன் தீரன் சின்னமலையின் 218 வது நினைவு தினம்... யார் இவர்? வரலாறு என்ன?