ஆடி மாதத்திலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிப்பெருக்கு (Aadi Perukku). தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் பல ஆன்மீக வரலாறுகள் அரங்கேறியுள்ளது.
ஆடிப்பெருக்கில் நீராடிய ராமபிரான்:
ஸ்ரீராம பிரானுக்கும், ஆடிப்பெருக்கு தினத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சீதைக்காக ஸ்ரீராமருக்கும், இராவணனுக்கும் இடையே நடந்த போர் நாம் அனைவரும் அறிந்ததே. அந்த போரில் ஸ்ரீராமபிரான் பல அசுரர்களை கொல்ல நேர்ந்தது. அசுரராக இருந்தாலும் அவர்களும் உயிர்கள் என்பதால், ராமபிரானை பிரம்ஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
பிரம்ஹத்தி தோஷம் பிடித்துக்கொண்ட ஸ்ரீராமபிரான், அந்த தோஷத்தில் நீங்குவது எப்படி என்று வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். அதற்கு வசிஷ்ட முனிவர், இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.
காவிரிக்கு சீர்தந்த நம்பெருமாள்:
ராமபிரானே கங்கையில் நீராடி தனது தோஷத்தை நீக்கிக்கொண்ட இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில், காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதால் நம்மை பிடித்துக்கொண்டுள்ள பாவங்களும், தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் நீங்களும் புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலில் யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர்வரிசை கொண்டு வருவது ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கம் ஆகும். ஆடிபெருக்கு நாளில் தன் காவிரிக்கு சீர்வரிசை செய்யவும் ஆவலோடு காவேரிக்கு வருவார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். காவிரித்தாய்க்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக யானை மேல் அமர்ந்து கொண்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.
இதன்காரணமாகவே, ஆண்டுதோறும் படித்துறைக்கு சீர்வரிசை கொண்டு வரும் விழா வைபோகமாக நடக்கிறது. அந்த சீர்வரிசையை ஸ்ரீபெருமாள் முன்பு வைத்து, உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர்வரிசையை சரிபாருங்கள் என்று கேட்டுவிட்டு, தீப ஆராதனையுடன் பூஜைகள் நடைபெறும்.
மேலும் படிக்க: Aadi 18: மங்களகரமான ஆடிப்பெருக்கு.. கட்டாயம் வாங்கவேண்டிய பொருட்கள் என்னென்ன? இவ்வளவு நன்மைகளா?
மேலும் படிக்க: Alagar Temple Chariot: கோலாகலமாக கொண்டாடப்படும் அழகர் கோயில் தேர்திருவிழா: பக்தி பரவசத்தில் மக்கள்..