தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று ஆடி மாதம். முழுக்க முழுக்க ஆன்மீக மாதமாகவே உள்ளது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் புகழ்பெற்றதாக அமைந்துள்ளது. ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை கீழே விரிவாக காணலாம்.


ஆடி மாதம்:


ஆடி மாதத்தின் மிகவும் முக்கியமான நாளான ஆடி பௌர்ணமி இன்று ஆகும். இதையடுத்து, திருவண்ணாமலையில் நேற்று முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற கோயில்களிலும் பக்தர்கள் காலை முதலே வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதையடுத்து, ஆடி மாதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்ற நாட்கள் எந்தெந்த கிழமையில் வருகிறது என்பதை காணலாம்.


ஆடிக்கிருத்திகை  - ஜூலை 29ம் தேதி( திங்கள்)


ஆடிப்பெருக்கு       - ஆகஸ்ட் 3ம் தேதி ( சனி)


ஆடி அமாவாசை    - ஆகஸ்ட் 4ம் தேதி (ஞாயிறு)


ஆடிப்பூரம்                - ஆகஸ்ட் 7ம் தேதி (புதன்)


நாக சதுர்த்தி            - ஆகஸ்ட் 8ம் தேதி ( வியாழன்)


கருட பஞ்சமி, நாகபஞ்சமி – ஆகஸ்ட் 9ம் தேதி ( வெள்ளி)


வரலட்சுமி விரதம்      - ஆகஸ்ட் 16ம் தேதி ( வெள்ளி)


ஆடி மாதத்தில் வர உள்ள ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு மிக மிக முக்கியமான நாள் ஆகும். இந்த நன்னாளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு கோயில்களில் காணப்படுவார்கள். ஆடிப்பெருக்கு நன்னாளில் புதுமண தம்பதிகள் தாலிப் பிரித்துக் கோர்ப்பார்கள். ஆடி அமாவாசை நாளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும்.


நாக தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாளில் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். வரலட்சுமி விரத நன்னாளில் பெண்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க: சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்விற்கு செல்லும் பக்தர்களே.. காவல்துறை அறிவிப்பு இதோ உங்களுக்காக!


மேலும் படிக்க:  Kuchanur Saneeswaran Temple: ஆடி சனிக்கிழமை... சனீஸ்வரர் பகவான் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்