பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். கோயில் பின்புறம் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். இந்த மலையை சுற்றிலு  14 கிரிவல பாதை உள்ளது . அண்ணாமலையார் கோவிலுக்கு வெளி மாநிலம் , வெளி நாடுகளில் இருந்தும்,வெளி ஊர்களில் இருந்தது பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்துவிட்டு , 14 கிலோமீட்டர் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். இந்தநிலையில் பௌர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதன்படி ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு நேற்று காலை முதலே தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கம் இல்லாததால் காலை முதலே  பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்க துவங்கியது.  பக்தர்கள் வருகைக்காக சென்னை, கோவை, வேலூர், சேலம், ஈரோடு என பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.




நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 


இதே போல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது நேற்று மாலை 6.4 மணிக்கு தொடங்கிய பௌர்ணமி இன்று மாலை 4.48 மணிக்கு முடிவடைகிறது. இதனால் அண்ணாமலையார் கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் ,உண்ணாமலை அம்மனுக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படு மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தமிழ் மாதங்களில் சூரியன் கடக ராசியில் நுழையும் நாளில் ஆடி மாதம் பிறக்கிறது. இதேபோல் சூரியன் தென்திசை நோக்கி நகரும் காலமான தட்சயான  புண்ணிய காலத்தில் முதல் மாதம் ஆடி மாதம் ஆகும், கடக ராசியின் அதிபதி சந்திரன் இந்த ராசியில் சூரியன் இருக்கும் காலத்தில் வரும் பௌர்ணமி மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு என்பதாலும் சனி, ஞாயிறு, விடுமுறை என்பதனால்  திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.




ரயில்நிலயத்தில் அலைமோதிய பக்தர்கள்  


நேற்று இரவு கிரிவலம் சுற்ற வந்த பக்தர்கள் இரவு முழுவதும் கிரிவலம் சுற்றிவிட்டு,அண்ணாமலையார் கோவிலில்  நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சமிதரிசனம் செய்தனர். அதன் பிறகு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து மூலமாகவும் ,இரயில் மூலமாக செல்வதற்காக ரயில் நிலையம் சென்றனர். அப்போது விழுப்புரதில் இருந்து திருப்பதி பயணிகள் ரயில் வந்தது,ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள் ரயிலில் ஏறுவதாகக் முட்டி மோதிகொண்டு ரயிலில்  இடம் பிடித்தனர்.  அதேபோன்று தற்காலிகமா அமைக்கப்பட்ட பேருந்து நிலையங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் பேருந்தில் இடம் பிடிக்க ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு ஓடும் பேருந்தில் ஏறி இடம் பிடித்தனர்.