மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டாவது அமாவாசை வந்ததால் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி , தர்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.


Modi Promises: பிரதமர் மோடி அளித்த டாப் 5 சுதந்திர தின வாக்குறுதிகள் - ஓர் அலசல்..!




தேனி மாவட்டம் கம்பம் அருகே பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூத நாராயணன் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களாக சுருளி அருவியில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடையானது நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அதே போல சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றிலும்  குளித்து பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.


Modi Promises: பிரதமர் மோடி அளித்த டாப் 5 சுதந்திர தின வாக்குறுதிகள் - ஓர் அலசல்..!




CM MK Stalin: டி.எம்.சௌந்திரராஜன் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்.. இன்று மதுரை பயணம்..!


அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி பேரணை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பரிகாரஸ்தலமான ஆஞ்சநேயர் கோயிலில் இன்று  ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வைகை ஆற்றில் புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.