மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலைநாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.




இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.


Miss India 2023 : பல இடங்கள்ல நிராகரிச்சாங்க.. வாய்ப்பை ஒதுக்க நான் முட்டாள் அல்ல... மிஸ் இந்தியா டைட்டில் வென்ற நந்தினி




இந்த  சட்டைநாதர் கோயில் பிரம்ம தீர்த்த குளக்கரையில், திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் வழங்கியதாக ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருமுலைப்பால் விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருமுலைப்பால் விழா இன்று எளிமையாக நடைபெற்றது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பிரம்ம தீர்த்த குளக்கரையில் நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு எளிமையாக நடைபெற்றது.


Upasana baby shower: ராம்சரண் மனைவிக்கு வளைகாப்பு..! நேரில் சென்று வாழ்த்திய அல்லு அர்ஜூன், சானியாமிர்சா..!




விழாவையொட்டி ஞானசம்பந்தர் உட்பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள மலைக்கோயில் எனப்படும் தோனியப்பர் ஆலயத்தில் இருந்து வெள்ளி குடத்தில் ஞானப்பால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தங்க பொற்கிணத்தில் திருஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற