தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் ராம் சரணுக்கு கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு உபாசனா என்பவருடன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மிகவும் சந்தோஷமான அவர்களின் திருமண வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற பந்தத்தையும் கடந்து பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற உள்ளனர்.


ராம்சரண் மனைவிக்கு வளைகாப்பு:


நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் ராம் சரண் - உபாசனா காமினேனி தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் உபாசனாவிற்கு அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இணைந்து ஹைதராபாத்தில் வளைகாப்பு விழாவை மிகவும் சந்தோஷமாக நடத்தினர். 


 



பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வு :


சில தினங்களுக்கு முன்னர் தான் உபாசனாவிற்கு அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைத்து துபாயில் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள்  சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. அதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் ஹைதராபாத்தில் ஒரு சர்ப்ரைஸ் வளைகாப்பு விழாவை உபாசனாவிற்கு நடத்தினர்.


இந்த வளைகாப்பு விழாவில் அல்லு அர்ஜுன், சானியா மிர்சா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அல்லு அர்ஜுன் உபாசனா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "என் ஸ்வீட்டஸ்ட் உப்சி @ உபாசனா கமினேனி கோனிடெலாவிற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என ஒரு பதிவையும் போஸ்ட் செய்துள்ளார்.


 



மகிழ்ச்சியான வளைகாப்பு :


உபாசனாவின் வளைகாப்பு பார்ட்டியில் ராம் சரணின் சகோதரிகள் சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா கல்யாண் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரம்  மற்றும் உறவினர்களுடன் எடுக்கப்பட்ட ஸ்வீட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் உபாசனா. தனது பேபி பம்பை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளிக்காட்டியிருந்தார் உபாசனா. சந்தோஷமும், மகிழ்ச்சியும் கேளிக்கையும் நிறைந்த ஒரு வளைகாப்பு விழாவாக மிகவும் நிறைவுடன் நடத்தப்பட்டது இந்த வளைகாப்பு விழா. 


ராம்சரண் திரைவாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்விலும் கடந்த  ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. இனி வரும் காலமும் அவருக்கு பல வெற்றியும் சந்தோஷமும் குவிய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.