இளைஞரின் தலையை சீவிய ஹெலிகாப்டர்.. தொடரும் மர்மம் - பல கோணங்களில் விசாரணை!

ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறிய பிறகு மீண்டும் ஏன் ஜாக் அதனருகே சென்றார் என்பது மர்மமாகவே உள்ளது. 

Continues below advertisement

கிரீஸ் நாட்டில் ஹெலிகாப்டரின் விசிறி தலையை சீவி இளைஞர் உயிரிழந்த வழக்கில் பல மர்மம் நீடித்து வருகிறது. ஹெலிகாப்டர் அருகே இளைஞர் ஏன் சென்றார் என்பதே புரியாத புதிராக உள்ளது

Continues below advertisement

கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜாக். 22 வயதான ஜாக் சமீபத்தில் ஹெலிகாப்டரின் விசிறி பட்டு உயிரிழந்தார். ஆக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜாக், விடுமுறைக்காக தன்னுடைய நண்பர்களுடன் அவுட்டிங் சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் லோக்கலில் சென்ற அவர்கள் ஊரைச் சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறிய ஜாக் ஹெலிகாப்டரின் விசிறி பட்டு உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறியபிறகு மீண்டும் ஏன் ஜாக் அதனருகே சென்றார் என்பது மர்மமாகவே உள்ளது. 

முதலில் இந்த சம்பவம் நடந்தபோது ஜாக் செல்ஃபி எடுப்பதற்காகவே ஹெலிகாப்டர் அருகே சென்றதாகவும் அப்போது விசிறி அவர் தலையை வெட்டியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சிலரோ தன்னுடைய செல்போனை ஹெலிகாப்டரில் வைத்துவிட்டதால் மீண்டும் எடுக்க ஜாக் சென்றதாக கூறுகின்றனர். நண்பர்கள் சிலர்  கூறும்போது ஜாக் ஹெலிகாப்டர் அருகே சென்றபோது அவன் கையில் செல்போன் இருந்தது. அவன் மீண்டும் நண்பர்களை சந்திக்க ஹெலிகாப்டரை நோக்கி சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

Crime: கடற்கரையில் காணாமல்போன மனைவி.. கதறிய கணவர்.. தீவிரமாக தேடிய அதிகாரிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அனைத்துக் கோணத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை குறித்து பேசியுள்ள போலீசார், செல்பி எடுக்கச் சென்றதாக தெரியவில்லை. சாட்சியங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் காதருகே போனை வைத்துக்கொண்டு ஜாக் சென்றுள்ளார். அப்படியானால் அவர் செல்போனில் பேசிகொண்டே நண்பர்களை பார்க்க அங்கே சென்றிருக்கலாம் என யூகிக்கிறோம் .மேற்கொண்டு விசாரணை நடக்கிறது. விரைவில் காரணத்தை கண்டறிவோம் எனத் தெரிவித்துள்ளனர்.மாணவரின் உயிரிழப்பு மிகவும் வருத்தம் அளிப்பதாக ஜாக் படித்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABP Exclusive: ‛பிரச்னை வரக்கூடாது... நீங்க சொல்றதை செய்றேன்னு அஜித் சொன்னார்’ திருச்சி DC ஸ்ரீதேவி சிறப்பு பேட்டி!


50 கோடி ரூபாய் பணம்...5 கிலோ தங்கம்...அமைச்சர் வீட்டில் கொத்து கொத்தாக சிக்கிய பணம்...நாட்டை உலுக்கும் பண மோசடி வழக்கு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola