உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டைம் இதழின் 2021-ஆம் ஆண்டின் சிறந்த நபருமான எலான் மஸ்க், "எனக்கு காதலி இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்ன் ஸ்டார்பேஸ் வசதியை "தொழில்நுட்ப மடாலயம்" என்று அழைத்தார். அதே நேரத்தில் "இங்கே சில பெண்கள் உள்ளனர், ஆனால் பலர் இல்லை” என்றும் கூறினார்.
டெஸ்லா கோடீஸ்வரர் "ஆண்டின் சிறந்த நபர்" இதழுக்காக டைம்ஸின் மோலி பால், ஜெஃப்ரி க்ளூகர் மற்றும் அலெஜான்ட்ரோ டி லா கார்சா ஆகியோருடன் சமீபத்திய நேர்காணலில் பாடகர் மற்றும் தயாரிப்பாளருமான தனது காதலி கிரைம்ஸிடம் இருந்து பிரிந்ததைப் பற்றி விவாதித்தார். மேலும் படிக்க: Apple Airtag App: இனி பாதுகாப்பா இருங்க.. ஆண்ட்ராய்டுக்கு App கொண்டு வந்த ஆப்பிள்.!
அதில், "கிரைம்ஸும் நானும், அநேகமாக அரைகுறையாகப் பிரிந்திருக்கலாம். நாங்கள் ஒருவரையொருவர் அவ்வளவாகப் பார்க்கவில்லை. இது தூரமாக இருப்பதால் நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் பெரும்பாலும் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார். மேலும் எனது வேலை பெரும்பாலும் தொலைதூர இடங்களில் உள்ளது. மூன்று வருட டேட்டிங்கிற்குப் பிறகு தானும் கிரிம்ஸும் பிரிவதாக முடிவு செய்தோம்” என்று கூறினார். மேலும் படிக்க: Log4Shell : ஹேக்கிங் அபாயத்தில் அமேசான், ட்விட்டர், ஆப்பிள்.! எச்சரிக்கை கொடுத்த வல்லுநர்கள்!!
டைம்ஸ் உடனான நேர்காணலில், மஸ்க் தான் தனிமையில் இருப்பதாகவும், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் ஏவுதளத்திற்கு அருகில் டெக்சாஸில் உள்ள போகா சிக்காவைச் சுற்றி அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும் கூறினார். மேலும் படிக்க: Netflix Price Reduction: தடாலடி அறிவிப்பு: போட்டியை சமாளிக்க விலையை அதிரடியாக குறைத்த நெட்பிளிக்ஸ்!
மேலும், "இந்த SpaceX அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப மடாலயம் போன்றது. இங்கே சில பெண்கள் உள்ளனர். நிறைய பெண்கள் இல்லை” என்றும் மஸ்க் கூறினார்.
தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தையை இருவரும் சேர்ந்து வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: Whatsapp Schedule Message: வாட்ஸ்அப்பில் மெசேஜ்-ஐ ஷெட்யூல் செய்வது எப்படி ? இதோ ஈசி டிப்ஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்